Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

‘வானம்’ விண்வெளித் தொழில்நுட்ப ஆக்சிலரேட்டர்: தமிழ்நாடு அமைச்சர் டிஆபி ராஜா தொடங்கி வைத்தார்

தமிழக தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பத்ம பூஷன் விருது பெற்ற இஸ்ரோ முன்னாள் விண்வெளி விஞ்ஞானி, நம்பி நாராயணன் முன்னிலையில் ‘வானம்’ விண்வெளி தொழில்நுட்ப ஆக்சிலேட்டர் நிறுவனத்தை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.

ஸ்பேஸ்-டெக் பிரிவின் அவசியத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா,

“தமிழ்நாட்டில் ஸ்பேஸ் ஆராய்ச்சியில் இன்று நிறைய நிறுவனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன, அந்த வகையில் வானம் என்ற பெயரில் ஒரு ஸ்பேஸ் ஆக்சிலரேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் டெக்கில் இருக்கும் புதிய தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். குலசேகரப்பட்டினத்தில் புதிய ஸ்பேஸ் போர்ட் வருகிறது. அங்கு புரபல்ஷன் பார்க் வருகிறது. எனவே இதைச்சுற்றியுள்ள பொருளாதார சூழல் வளர்ச்சியடையும்,” என்றார்.

40 பில்லியன் டாலர்களுக்கு இந்த தொழிற்துறை வளரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் வானம் முயற்சி ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், என்றார் ராஜா.

வானம் ஸ்பேஸ் டெக் ஆக்சிலரேட்டர் இந்தியாவின் முதல் செக்டார் அடிப்படையிலான தனியார் ஸ்பேஸ் டெக் ஆக்சிலரேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் சூழலமைவை வளர்த்தெடுப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘Vaanam’ என்பது தொழில்முனைவோர்களான ஹரிஹரன் வேதமூர்த்தி மற்றும் சமீர் பரத் ராம் ஆகியோரின் ஸ்டார்ட்-அப் முயற்சியாகும். பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வழிகாட்டுதலோடு ஒரு செழிப்பான விண்வெளி ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

தொழிலதிபர் ரவி மாரிவாலா மற்றும் நடிகர் / இயக்குனர் ஆர்.மாதவன் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் இந்தியாவின் முதல் தளமாக வானம் அறிமுகமாகியுள்ளது.

ஆரம்ப நிலையில் உள்ள வணிகங்கள் மற்றும் ஸ்பேஸ்-டெக் பிரிவு ஸ்டார்ட்-அப்`கள் வளரவும் அவற்றைப் புதுமைப்படுத்தவும் தேவையான முதலீட்டு உதவிகள், வர்த்தகத்தை பெருக்க பிசினஸ் வழிகாட்டுதல்கள், மற்றும் பிரத்யேக கருவிகளை பெற உதவி செய்யவிருக்கிறது வானம்.

வானம் உருவாக முக்கிய வழிகாட்டியாக இருக்கும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணம் இந்த முயற்சி பற்றிக் கூறுகையில்,

“இந்த புதிய முயற்சியின் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நிறுவனர்கள் ஹரிஹரன் மற்றும் சமீர் ஆகியோரின் தனித்துவமான முயற்சி இது என்பதோடு இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் காலக்கட்டத்தில் இது சரியான முயற்சியும் கூட. வானமே எல்லை…” என்றார்.

வானம் அறிமுக விழாவில் ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட இணை நிறுவனர் ஹரிஹரன் வேதமூர்த்தி பகிர்கையில்,

“பொதுவாக விண்வெளி-தொழில்நுட்பத் துறையில் பல்வேறு பயன்பாட்டு வழக்குகள் உள்ளன, அதாவது ‘செயற்கைக்கோள் தரவுகளை அகழ்வாராய்ச்சி செய்வது முதல் சிறுகோள்களை ஆராய்வது வரை,’ இந்த பயன்பாட்டுகளை நனவாக்க வளர்ந்து வரும் தேவை உள்ளது. இந்தியாவில், சமீப ஆண்டுகளில், இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் பல ஸ்டார்ட்அப்கள் உருவாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம், ஆனால், இந்த பெரிய தேவைகளை சந்தைக்கு கொண்டு வர திடமான வணிகமயமாக்கல் கட்டமைப்பில் ஒரு வெற்றிடம் உள்ளது. இங்குதான் வானம் நுழைந்து, இந்த ஸ்டார்ட்அப்கள் எதிர்கொள்ளும் வணிகமயமாக்கல் இடைவெளிகளை நிரப்ப உதவுகிறது மற்றும் அவற்றின் புதுமைகளை சந்தை-தயார்நிலையுடன் விரைவாக சந்தைக்கு கொண்டு வருகிறது.”

இணை நிறுவனர் சமீர் பாரத் ராம் கூறுகையில்,

“தமிழ்நாட்டில் குறிப்பாக ஸ்பேஸ்-டெக் ஸ்டார்ட்-அப்கள் வளர்ச்சியில் வானம் சிறப்பு கவனம் செலுத்தும். தற்போது இத்துறையில் உள்ள சரியான ஸ்டார்-அப்’களை கண்டறிந்து, அவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப இடர்பாடுகளை நீக்கவும், விதை நிதி பெற உதவவும், அரசு-தனியார் கூட்டை ஏற்படுத்தி, வர்த்தக வளர்ச்சியை பெறவும் வானம் ஆக்சிலரேட்டர் உதவி செய்யும்.”

வானம்; பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விண்வெளி சிந்தனையை வளர்க்கவும் ‘விண்வெளி கிளப்’களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளப்பின் ஒரு பகுதியாக பயிலரங்குகள் போன்றவற்றை நடத்த இருக்கிறோம்,” என்றார் சமீர் பரத் ராம்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *