Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

உள்ளூர் டூ உலக மார்க்கெட்… நேந்திர சிப்ஸ் பிசினஸில் சிகரம் தொட்ட ஸ்டார்ட்அப்!

அண்டை மாநிலமான கேரளத்துக்கு உற்றார், உறவினரோ, நண்பரோ, தெரிந்தவரோ, கோவிலுக்கோ, அல்லது சுற்றிப்பார்க்கவோ சென்று திரும்பினாலும், அவர்களிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி. கேரளாவுல இருந்து ‘சிப்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா?’ என்பதுதான். அந்த அளவிற்கு தென்தேசத்தில் நேந்திரம் சிப்ஸிற்கென ஒருபெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அப்படியாக நேந்திர சிப்ஸின் மீது கொண்ட விருப்பத்தால், உள்ளூரில் பிரசித்துபெற்ற சிப்ஸை உலக சந்தைக்கு எடுத்து செல்ல திட்டமிட்டார் சேட்டன் மானஸ் மது. அதற்காக கைநிறைய வருமானம் அளித்த கார்ப்பரேட் பணியையும் உதறி தள்ளி, வகை வகையான சுவைகளில் நேந்திர சிப்ஸ்களை தயாரிக்கும் ‘பியாண்ட் ஸ்நாக்ஸ்’ ‘Beyond Snacks’ எனும் சிற்றுண்டி ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளார்.

2020ம் ஆண்டு அவருடைய நண்பர்களான ஜோதி ராஜ்குரு மற்றும் கௌதம் ரகுராமன் ஆகியோருடன் சேர்ந்து, ஆலப்புழாவை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டார்ட்அப்பைத் தொடங்கினார்.

4 வருட கடின உழைப்பின் பலனாய் சந்தையில் தனக்கென இடத்தை பிடித்துள்ள நிறுவனம் 2024ம் நிதியாண்டில் 34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட கடந்த நிதியாண்டின் வருவாயான ரூ.17 கோடியிலிருந்து இரட்டிப்பு மதிப்பாகும். 2025ம் நிதியாண்டில் ரூ.100 கோடி வருவாய் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

வணிகமாக மாறிய சிப்ஸின் மீதான விருப்பம்…

கேரளாவை சேர்ந்தவர் என்பதாலும், பால்ய வயது முதல் விரும்பி உண்ட பதார்த்தங்களில் ஒன்றாக நேந்திர சிப்ஸ் இருந்ததால் என்னவோ மானஸிற்கு நேந்திர சிப்ஸ் மீது அளவுகடந்த விருப்பம். உள்ளூரில் பிரபலமாக இருந்தாலும், உலக சந்தைகளில் அயல்நாட்டவர் உருவாக்கிய சிப்ஸ் வகைகளே ஆட்சி செய்து வந்ததால், நேந்திர சிப்ஸ்கென மார்கெட்டை உருவாக்க திட்டமிட்டார். இவ்வெண்ணத்தின் நீட்சியாய், 2015ம் ஆண்டு கைநிறைய வருமானம் அளித்த பன்னாட்டு நிறுவனமான கேப்ஜெமினியில் மூத்த ஆலோசகராக இருந்த வேலையை விட்டார்.

பின்னர், கேரளாவுக்கு திரும்பி, பிரபல சிற்றுண்டியான சிப்ஸ் வணிகத்தை பற்றி ஆராய்ச்சி செய்தார். சிப்ஸின் சுவை, அமைப்பு மற்றும் தடிமன் ஆகியவற்றில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உற்பத்தி செயல்முறையை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டார். ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் சிப்ஸை ருசிக்கும் போதெல்லாம் ஒரே அனுபவத்தை தர உற்பத்தி செயல்முறையை முறைப்படுத்தி, சிற்றுண்டி வணிகத்துக்குள் அறிமுகமாகினார்.

வணிகத்தின் அடுத்தகட்டமாக கர்நாடகாவின் தும்கூர் நகரத்தில் 95% செயல்முறை முழுவதுமாக தானியங்கு இயங்கும் உற்பத்தி கூடத்தை தொடங்கினார். அதனால், மாதத்திற்கு 2-2.5 மெட்ரிக் டன்னாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறன், மாதத்திற்கு 6.6 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. 2027ம் ஆண்டில், அதன் உற்பத்தியை 600 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும், சந்தையில் கோலோச்சி வந்த லேஸ் மற்றும் பிங்கோ போன்ற நிறுவனங்கள், சுவைகளில் அதிக வகைகளை வழங்கி வந்தன.

நேந்திர சிப்ஸிலும் வெவ்வேறு சுவைகளை உருவாக்கினர். அசல் சுவை, சால்ட் மற்றும் பெப்பர், பெரிபெரி, மாசலா, சில்லி, மற்றும் க்ரீமி ஆனியன் சுவைகளில் தயாரித்தது. சமீபத்தில் தேங்காய் எண்ணெய்யில் பொறித்த நேந்திர சிப்ஸையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஸ்டார்ட்அப்பின் R&D குழு பல்வேறு எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் இணைந்து வாழைப்பழ சில்லுகளின் சமையல் செயல்முறைக்கு மிகவும் பொருத்தமான சரியான வகையான எண்ணெயைப் பெறுவதற்கு வேலை செய்தது.

“வெவ்வேறு வகையான சுவைகளை உருவாக்குவதற்கு அதிகப்படியான நேரமும், முயற்சியும் தேவை. க்ரீம் அண்ட் ஆனியன் சுவையினை நேந்திர பழத்தில் கொண்டு வருவதற்கு அதிக முயற்சி செய்தோம். ஏனெனில், அந்த வகையான சிப்ஸிற்கு வாழைப்பழங்கள் ஏற்றதல்ல. இருப்பினும், அதிக புளிப்பு சுவையை சேர்த்து அந்த சுவையை உருவாக்கினோம்.”

அதே போல், சிப்ஸ் பொறிப்பதற்கு ஏற்ற எண்ணெய்யை கண்டுபிடிப்பதற்கு நிறைய ஆராய்ந்தோம். சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அதிக வெப்பநிலையைத் தாங்கும் என்பதால், இது வாழைப்பழ சிப்ஸ் வறுக்க ஏற்றதாக இருந்தது, என்றார் அவர்.

விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல்; 80% பெண் ஊழியர்கள்;

உயர்தர பழுத்த வாழைப்பழங்களை பெறுவதற்காக நிறுவனமானது கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 220 விவசாயி குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் செயல்முறையில், வாழைப்பழங்கள் முதலில் தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முதல் தரமான மற்றும் சரியான முதிர்ச்சியை அடைந்த வாழைப்பழங்களை மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இதன்மூலம் சிப்ஸின் மொறுமொறுப்பு தன்மையும் சுவையும் பராமரிக்க உதவுகிறது. ‘பியாண்ட் ஸ்நாக்ஸ்’ நிறுவனத்தில் மொத்தம் 220 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் 52 பேர் நிரந்தர பணியாளர்கள், மீதமுள்ளவர்கள் ஒப்பந்த பணியாளர்கள்.

“நிறுவனத்தினை முழுக்க முழுக்க பெண் பணியாளர்கள் கொண்டு நடத்த வேண்டும் என்பதே விருப்பம். இருப்பினும், உற்பத்தி செயல்முறையில் இயந்திரம் தொடர்பான சவால்கள் நிறைந்திருப்பதால் சுமார் 80% பெண்களைக் கொண்ட குழுவை கொண்டுள்ளோம். ஆண் தொழிலாளர்களின் நிழலாக 11 பெண்கள் பணிபுரிகின்றனர். 2026ம் ஆண்டுக்குள் 100% பெண்களால் நடத்தப்படும் என்று நம்புகிறோம்,” என்றார்.

2020ம் ஆண்டில் ஸ்டார்ட்அப் அதன் ஆஃப்லைன் சில்லறை விற்பனையை பெங்களூருவில் தொடங்கி, கேரளாவில் சில பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியது. அந்த சமயம், தொற்றுநோய் தாக்கியதால், பியோண்ட் ஸ்நாக் ஆன்லைன் ரீடெய்ல் மாடலுக்கு மாறி விற்பனையை அதிகரிக்கத் தொடங்கியது.

அதன்பிறகு, இந்தியா முழுவதும் அதன் ஆஃப்லைன் இருப்பை மெதுவாக விரிவுபடுத்தியுள்ளது. 20 – 25 ஆக இருந்த அதன் விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை இப்போது 125 விநியோகஸ்தர்களாக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப் மற்றும் தெற்கில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அதல் இருப்பை அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கத்தார், குவைத், சுவீடன், துபாய், தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

அடுத்த ஐந்தாண்டுகளில், லேஸ் போன்ற உலகளாவிய பிராண்டாக மாறி, ரூ.5,000 கோடி வருவாயை எட்டுவதை நிறுவனம் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *