Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

ஜாக் டோர்ஸியின் ‘Bluesky’ vs Twitter – இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

பயனர்கள் முழுவதும் டெக்ஸ்டில் அதிக கவனம் செலுத்தும் வகையில் ப்ளூஸ்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை போலவே இயங்குகிறது ’ப்ளூஸ்கை’ சோஷியல் தளம். இதற்கான விதையை விதைத்தவர் ஜாக் டோர்ஸி. ட்விட்டரை உருவாக்கிய நான்கு பேரில் டோர்ஸியும் ஒருவர்.

சுமார் 8 ஆண்டு காலம் (இரண்டு முறை) ட்விட்டர் நிறுவன சிஇஓ-வாக இயங்கியவர். அதனால் ஜாக் டோர்ஸியின் ப்ளூஸ்கை சோஷியலுக்கும் ட்விட்டருக்குமான வித்தியாசம் என்ன என்பதை பார்ப்போம். 

Bluesky vs Twitter

ப்ளூஸ்கை: டீசென்ட்ரலைஸ்டு சோஷியல் நெட்வொர்க் புரோட்டோகால் மற்றும் அசோசியேட்டட் சோஷியல் நெட்வொர்கிங் சேவையை முன்னெடுக்கும் முயற்சியாக 2019ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் ப்ளூஸ்கை.

ட்விட்டர் நிறுவனத்தால் லாப நோக்கமற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டது. அப்போது ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ டோர்ஸி தான். இதன் மூலம் சோஷியல் நெட்வொர்க்குகள் மற்ற சோஷியல் நெட்வொர்க்குகளுடன் திறந்த தரநிலை அடிப்படையில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டது. 

ட்விட்டரை வாங்கிய மஸ்க்: கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு, அதில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். ட்விட்டர் நிறுவனம் சார்ந்து அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அதிர்வலைகளை எழுப்பியது. ட்விட்டர் நிறுவனத்தில் பெரிய அளவில் கொள்கை அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார். அது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 

இது அனைத்தும் ட்விட்டரின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாஸ்டடோன் எனும் தளம் பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வந்தது. இது பிரைவேட் சர்வர்களில் இயங்கும் சமூக வலைதளம்.

ப்ளூஸ்கையை போலவே இதுவும் டீசென்ட்ரலைஸ்டு தளம் தான். இந்த நிலையில் ப்ளூஸ்கை சார்பில் ‘ப்ளூஸ்கை சோஷியல்’ எனும் சோஷியல் நெட்வொர்க்கை நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Bluesky Social: பயனர்கள் முழுவதும் டெக்ஸ்டில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 300 கேரக்டர்கள் வரை ஒவ்வொரு பதிவையும் பயனர்கள் போஸ்ட் செய்ய முடியும். போட்டோக்களும் பதிவு செய்யலாம். வீடியோ மற்றும் டைரக்ட் மெசேஜ் சப்போர்ட் இதில் இல்லை. கிட்டத்தட்ட மாஸ்டடோனை போலவே இதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சர்வர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த சர்வர் சார்ந்த ஃபீட் அவர்களுக்கு கிடைக்கும். இந்த சர்வர்கள் பல்வேறு ஜானர்களில் இருக்கும் என தகவல். 

இப்போதைக்கு அழைப்பின் பேரில் மட்டுமே ப்ளூஸ்கை சோஷியலை எலக்ட்ரானிக் சாதன பயனர்கள் பயன்படுத்த முடியும். அல்லது இதை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து வெயிட் லிஸ்டில் இணைந்து கொள்ள வேண்டும். 

அப்படியே ட்விட்டரை பிரதிபலிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. பயனர்கள் தாங்கள் பின்தொடர்பவர்களின் (Following) பதிவுகள் மற்றும் சுடச்சுட (What’s Hot) பதிவுகளை இதில் பார்க்கலாம். ட்விட்டரை போலவே லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்யவும் முடியும்.

பயனர்கள் @jkay.bsky.social என்ற ஐடியில் அறியப்படுகின்றனர். இதன் மூலம் மற்ற பயனர்களை அவர்களது ஐடி கொண்டு இதில் டேக் செய்யலாம். இப்போதைக்கு சுமார் 40 ஆயிரம் பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பிரபலங்களின் கவனத்தை மெல்ல மெல்ல ஈர்த்து வருகிறது இந்தத் தளம் ட்விட்டருக்கு மாற்றாக அமைகிறதா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *