Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

இதிகாசங்களின் அடிப்படையிலான விளையாட்டுகள்; குழந்தைகளின் பொழுதுபோக்கினை மாற்றியமைக்கும் சரண்யா.

சென்னையைச் சேர்ந்த சரண்யா குமாரால் நிறுவப்பட்ட சித்தம் நிறுவமானது, மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து படிப்பினைகளையும் நுண்ணறிவுகளையும் எடுத்து அதனை அடிப்படைக்கொண்ட, பலகை விளையாட்டுகள், ஆக்டிவிட்டிகள், புத்தகங்களை தயாரிப்பதன்மூலம், விளையாட்டின் வழி இந்திய மொழிகள் மற்றும் உணவுவகைகளைப் பற்றி குழந்தைகள் அறிந்துகொண்டு, அவர்களது பொழுதுபோக்கினை மாற்றி வருகிறது.

இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட சரண்யா குமார், இதிகாசங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளை வைத்து வாழ்க்கையை மாற்றி கொண்டவர். அமெரிக்காவில் கணினி அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்று, 14 ஆண்டுகளால பல கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இறுதியாய் இந்திய புராணங்களின் அடிப்படையில் ஒரு வணிகத்தைத் தொங்க முடிவு செய்தார்.

அதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சித்தம் நிறுவனத்தை தொடங்கினார். 2024ம் ஆண்டு மே மாதத்திற்குள்ளே சித்தமானது அதன் கேம்களை உலகளவில் 700 பயனர்களுக்கு விற்பனை செய்துள்ளது. தொடங்கிய முதல் ஆண்டிலே ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.

2011ம் ஆண்டு காலவாக்கில் சரண்யா அவரது வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுகையில் மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய இதிகாசங்களே கைக்கொடுத்துள்ளன. அச்சமயத்தில் அவரது பாட்டி அடிக்கடி உரைக்கும், “நீங்கள் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகளை கடக்கும் போது, உங்களது கலாச்சார வேர்கள் உங்களுக்கு உதவும்,” என்ற கூற்று அவருக்குள் எதிரொலித்து கொண்டேயிருந்தது.

இதிகாசங்களை திரும்ப திரும்ப படிக்க தொடங்கினார். அதல் பலனாய், அவர் தேடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கான ஒவ்வொரு பதிலையும் இதிகாசங்களின் வழி கண்டறிந்தார்.

“இதிகாசங்கள் மூலம் நான் ஆன்மிகத் தொடர்பை மட்டும் கண்டறியவில்லை. நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கொள்கைகளையும் அவை கற்றுக்கொடுத்தன. வாழ்க்கையின் கடினமான நாட்களை கடந்துவந்த பிறகு, சொந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது. ஆனால், அது என்ன என்றெல்லாம் எனக்கு தெரியாது. அதற்கான திசையில் பயணிப்பதற்கான முதல் படியாக எம்பிஏ படிக்க முடிவு எடுத்தேன். அதற்காக சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் சென்று எம்பிஏ பட்டம் பெற்றேன்,” என்று பகிரத் தொடங்கினார் சரண்யா.

பட்டம் பெற்றதைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தில் குறுகிய காலம் பணிபுரிந்தநிலையில், 2020ம் ஆண்டு ராதா நாராயணன் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து குருகூல் ஃபன் என்ற கேம் நிறுவனத்தை நிறுவினார். அதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு குழந்தைகளுக்காக சித்தம் எனும் விளையாட்டு தயாரிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் வெறும் 5 தயாரிப்புகளுடன் தொடங்கப்பட்ட சித்தம், அதன் முதல் ஆண்டை நிறைவு செய்யும் முன்னே 13 தயாரிப்புகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது.

“இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றை வேடிக்கையான கூறுகளுடன் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையிலான விளையாட்டுகள், ஆக்டிவிட்டிகள் மற்றும் புத்தகங்களை வடிவமைத்து தயாரித்தோம். குழந்தைகளை சென்றடைவதே எங்களது நோக்கம். அதனால், ஆரம்பத்தில் இருந்தே எளிமையான விளையாட்டு மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குவதே எங்களின் அடிப்படைக் கொள்கை. விளையாட்டின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு விளையாட்டையும் குடும்பப் பெரியவர்கள் ஒரு பகுதியையும், குழந்தைகள் மற்றொரு பகுதியையும் கண்டுபிடிக்கும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, எங்களிடம் ‘பார்ட்டி டாக்ஸ்’ என்ற பலகை விளையாட்டு உள்ளது. தமிழ் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், குழந்தைகள் பழமொழிகள் தொடர்பான சவால்களை வரைந்து கண்டுபிடிப்பார்கள். அதே வேளை, இந்த பழமொழிகளை நன்கு அறிந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அவர்கள் சவால்களை தீர்க்க உதவுகிறார்கள்.

இந்த பலகை விளையாட்டை வடிவமைத்தவுடன், அதை 80 மற்றும் 90 வயதிலிருக்கும் என்னுடைய பாட்டி மற்றும் மாமியாருடன் கொடுத்து சோதித்து பார்த்தேன். சித்தமின் பெஸ்ட்செல்லர் கேமான, ‘பாரத விலாஸ்’ என்பது இந்தியாவின் நெசவுகள், நடன வடிவங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பூர்வீக உணவு வகைகளை ஆராயும் ஒரு சீட்டாட்டம் ஆகும். எங்கள் பெரும்பாலான விளையாட்டுகளைப் போலவே, இந்த விளையாட்டின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது ஒரு குடும்பத்தில் உள்ள வெவ்வேறு தலைமுறை மக்களை ஒன்றாக இணைக்கிறது

இன்றைய காலக்கட்டத்தில் குடும்பங்களுக்குள் அர்த்தமுள்ள உரையாடல்கள் அரிதாகிவிட்ட நிலையில் எங்களது விளையாட்டுகளை அவற்றை மீட்டெடுக்கும் மிகவும் பொருத்தமானது. மிகவும் துண்டிக்கப்பட்ட உலகில், நாங்கள் வழங்க விரும்பிய விஷயங்களில் ஒன்று இணைப்பு மற்றும் பகிர்வு, அவை மறைந்து வரும் நமது கலாச்சாரத்தின் உள்ளார்ந்த அம்சங்களாகும்,” என்றார் சரண்யா.

சித்தமின் கேம்களின் விலை ரூ.295 முதல் ரூ.1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலே ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டியது. சமீபத்தில் அதன் முதல் விதை சுற்றின் ஒரு பகுதியாக ரூ.30 லட்சம் நிதியையும் திரட்டியது.

மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் தொடக்கத் திட்டங்களிலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தொழில்முனைவோர்களான கேஷிட்டி டேவி மற்றும் தீபா சேகர் ஆகியோரால் நடத்தப்படும் கண்காட்சியான “பை ஹேண்ட் ஃப்ரம் ஹார்ட்”-ன் மூன்று பதிப்புகளிலும் பங்கேற்றுள்ளது.

“பொழுதுபோக்கு மற்றும் கல்வி என தெளிவாக வரையறுக்கப்பட்ட இரண்டு துறைகளில், நாங்கள் இரண்டின் கீழும் வரவில்லை. இந்திய கலாச்சாரக் கல்வியின் தேவை மற்றும் சந்தை பற்றிய விரிவான புரிதல் முதலீட்டாளர்களிடையே இல்லை என்பதை உணர்கிறேன். நாங்கள் இந்திய கலாச்சாரத்தில் வேலை செய்கிறோம் என்று கூறியவுடன், நாங்கள் கைவினைஞர்களுடன் பணிபுரியும் இலாப நோக்கற்றவர்கள் என்று உடனடியாகக் கருதும் போக்கு நிலவுகிறது.

கலாச்சார தொழில்முனைவோர் என்ற பரந்த குடையின் கீழ் ‘எடுடெயின்மென்ட்’ போன்ற முக்கிய பிரிவின்கீழ் ஒரு பெண் தொழில்முனைவராக வணிகம் செய்வது கடினமாக இருக்கிறது. இந்த எல்லா காரணிகளாலும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வணிகம் செய்வதும் கடினமாகியுள்ளது,” என்று அவர் கூறினார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *