நிலவுக்கு செல்லும் முதல் பெண் ‘கிறிஸ்டினா கோச்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
நிலவில் கால்பதிக்கப் போகும் முதல் பெண் கிறிஸ்டினா கோச்!
50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் செல்ல இருக்கும் நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. நால்வரில் ஒருவரான விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், நிலவைச் சுற்றி வரப்போகும் முதல் பெண்மணி ஆவார்.
நிலவு உலகின் அதிசயங்களை மனிதன் கண்டுபிடிக்கத் தொடங்கியதில் இருந்து சந்திரனைச் சுற்றி வரவுள்ள முதல் பெண்மணி கிறிஸ்டினா ஹம்மாக் கோச் ஆவார். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நிலவைச் சுற்றி வரவுற்ற ஓரியான் விண்வெளி ஓடத்தில் இடம்பெற உள்ள நான்கு பேரில் இந்த திட்டத்தின் நிபுணராக கோச் செயல்பட உள்ளார் என்று கூறியுள்ளது.
இதுவரையில் நிலவின் சுற்றுவட்டப்பாதை மற்றும் அதன் மேற்பரப்பிற்கு ஆண் விண்வெளி வீரர்கள் மட்டுமே சென்றுள்ளனர். இந்த புதிய திட்டம் நிலவில் முதன் முதலில் பெண் வீராங்கனையின் வருகை என்கிற வரலாற்றை படைக்கும். கோச் உடன் விண்வெளி வீரர்கள் ஜெரமி ஹான்சன், விக்டர் க்ளோவர் மற்றும் ரீட் வைஸ்மேன் ஆகியோர் நிலவில் 10 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள்.
“நான் இங்கே இருப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். நான் இந்த திட்டத்தை பற்றி சிந்தித்த போது, அது மிகவும் அற்புதமானது என்பதை உணர்ந்தேன். உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டில் நாங்கள் பயணிக்கப்போகிறோம், ஆயிரக்கணக்கான மயில்களைக் கடந்து அனைத்தையும் பரிசோதிக்கப் போகிறோம், அதன் பின்னர், நிலவுக்குச் செல்கிறோம். இந்த உலகின் ஆச்சரியங்கள், ஆசைகள் மற்றும் கனவுகளையும் எங்களோடு இந்த திட்டத்தில் நாங்கள் நிலவுக்கு எடுத்துச் செல்கிறோம்,” என்று கோச் தன்னுடைய பெயர் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாசாவின் அறிவிப்பைத் தொடர்ந்து Artemis-2 திட்டத்தின் 10 நாட்கள் பயணத்திற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதற்கு முன்னர் 1972ல் அபல்லோ திட்டத்தில் நிலவுக்கு மிக அருகில் மனிதன் தரை இறங்கினான். அபல்லோ 17 கமாண்டர் இயூஜினு கெர்னேன் பூமியின் இயற்கை செயற்கைகோளான நிலவில் தன்னுடைய கால்தடங்களைப் பதித்தார்.
யார் இந்த கிறிஸ்டினா கோச்?
மிசிகெனின் கிராண்ட் ரேபிட்ஸை பிறப்பிடமாகக் கொண்ட கோச், வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் மற்றும் இயற்பியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர், எலக்ட்ரிக்கல் என்ஜினியிரிங்கில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
விண்வெளி வீரராக வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார் கோச். நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் பிளைட் மையத்தில் (GSFC) எலக்ட்ரிக்கல் என்ஜினியராக தன்னுடைய பணியைத் தொடங்கியவர் நாசாவின் பல்வேறு விண்வெளி திட்டங்களின் விஞ்ஞான உபகரணங்கள் உருவாக்கத்தில் பங்காற்றி இருக்கிறார்.
2019ம் ஆண்டில் பெண்கோனுர் காஸ்மோட்ரோமில் இருந்து சூயூஸ் MS-12 விண்கலத்தில் முதன் முதலில் கோச் அனுப்பப்பட்டார். பிளைட் என்ஜினியராக பணியாற்றும் கோச் மற்றும் அவருடைய குழுவினர் உயிரியல், புவி அறிவியல், மனித ஆராய்ச்சி, இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என நூற்றுக்கணக்கான பரிசோதனைகளில் பெரும் பங்காற்றி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான விண்வெளி நடைபயணம் உள்பட ஆறு முறை விண்வெளியில் நடந்திருக்கிறார் கோச். மொத்தம் 42 மணி நேரங்கள் 15 நிமிங்கள் என சுமார் 328 நாட்கள் கோச் விண்வெளியில் இருந்திருக்கிறார்.
விண்வெளி வீரர்கள் நிலவுக்கு குழுவாகச் செல்வதை ஆர்டெமிஸ் 2 அறிமுகப்படுத்துகிறது – ஆனால் நிலவில் மனிதர்கள் தரையிறங்குவது இது முதல்முறையல்ல. இதன் முக்கிய நோக்கமே 10 நாட்களில் நிலவைச் சுற்றி 2.3 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து மீண்டும் பூமிக்குத் திரும்புவதாகும். விண்கலன் மிக ஆழமாகச் செல்லும் போது ஓரியனில் இருக்கும் வசதிகள் விண்வெளி வீரர்களுக்கு உயிர்வாழ்வதற்கான பாதுகாப்பை அளிக்கும் வகையில் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆர்டெமிஸ் 2வின் சோதனை தொடங்க உள்ள நிலையில், இதன் முன் ஏற்பாடாக செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு இருப்பிடத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த பிரத்யேக இடத்தில் 4 பேரும் ஓராண்டிற்கு தங்க வைக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட நான்கு பேரும் ஓரியான் விண்கெலம் மூலம் நிலவை அடைவார்கள்.