Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

‘கழிவிலிருந்து வளம்’ – தேங்காய் மட்டையில் இருந்து பானைகள், பைகள் தயாரிக்கும் சென்னை நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த ஆய்வாளரான அனீஸ் அகமது, தேங்காய் நாறு நிறுவனத்தில் பணியாற்றிய தனது தந்தையிடம் இருந்து தேங்காய் நாரில் இருந்து உரம் தயாரிக்க கற்றுக்கொண்டார். உயிரிதொழில்நுட்ப பட்டதாரியான அனீஸ், இந்த உரத்தின் தன்மை குறித்து அறிய தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

தேங்காய் மட்டையில் இருந்து நாறுகளை எடுத்த பின் கழிவாக இவை மிஞ்சுகின்றன. கிரீன் ஹவுஸ், நர்சரி, தோட்டங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தண்ணீரை தக்க வைக்கும் தன்மை, காற்றோட்டம், பிஎச் சமநிலை, நோய் எதிர்ப்பு மற்றும் மறுசுழற்சி திறன் ஆகியவை இவற்றை தோட்டக்கலை மற்றும் விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றுவதாக டச்சு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த பொருளின் தன்மை உணர்ந்து, அனீஸ் சென்னையில் 2012ல் ‘Global Green Coir’ நிறுவனத்தை துவக்கினார். இந்த ஸ்டார்ட் அப் கோகோ பீட் கொண்டு, பானைகள், செங்கற்கள், பைகள் ஆகியவற்றை தயாரிக்கிறது. இவை சர்வதேச அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

“இன்றைய உலகில் மறுபயன்பாடு மிக முக்கியம். இது இயற்கைக்கு திரும்பி கொடுப்பதாக அமைவதோடு, அனைத்து பொருட்களும் திறம்பட பயன்படுத்தப்படும் சுழற்சியை உருவாக்குகிறது,” என அனீஸ் அகமது சோஷியல் ஸ்டோரியிடம் பேசும்போது கூறினார்.

ஆரம்ப கட்டம்

அனீசுக்கு எப்போதுமே இயற்கையும், தோட்டங்களும் பிடித்தமானவை. சிறுவயதில் தனது வீட்டு தோட்டத்தில் காய்கறி செடிகளை வளர்த்தார். கல்லூரி காலத்தில் இதை கைவிட்டாலும், அதற்காக ஏங்கியிருக்கிறார்.

தென்னை மரம் நிறைந்த பகுதிகளில் வளர்ந்ததாலும், அவரது தந்தை தேங்காய் நாறு தொடர்பான துறையில் பணியாற்றியதாலும், தேங்காய் பொருட்கள் தொடர்பான புரிதல் இருந்தது.

“வர்த்தகம் துவக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றாலும் பல விஷயங்கள் அதை நோக்கித் தள்ளின,” என்கிறார்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு எடின்பர்க் பல்கலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வாளராக பணியாற்றினார். கோகோ பீட் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட போது பல நாடுகளில் மண் வளம் காக்க பீட் மோஸ் (peat moss) பயன்படுத்தப்படுவதை அறிந்தார். ஆனால், இந்த பொருள் பல பாதகங்களை கொண்டிருந்தது.

இந்த பொருளை உற்பத்தி செய்வது மீத்தேன் வாயுவை உண்டாக்குகிறது. இது புவி வெப்பமாதலுக்கு மேலும் வழிவகுக்கிறது. எனவே, கோகோ பீட் நல்ல மாற்றாக இருக்கும் என கருதினார். மேலும், இந்த பொருள் கழிவாக கருதப்படுவதாலும், தீப்பிடித்துக்கொண்டால் பல நாட்கள் எரியும் என்பதாலும் விலக்கப்படுவதை உணர்ந்தார்.

இதன் விளைவாக `குலோபல் கிரீன் காயர்` நிறுவனத்தை துவக்கினார். அப்போது வெகு சில நிறுவனங்களே இந்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன.

“ஆரம்பத்தில் மக்கள் கோகோ பீட்டை கழிவு என கருதி அதை இலவசமாக அளித்தனர். ஆனால், இந்தியா பெரிய சந்தை என்பதால் மக்கள் இந்த தயாரிப்புக்கு ஏற்ப மாறி வருகின்றனர்,” என்கிறார்.

2023ல் இந்த சந்தை 3.98 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்தது. ஆண்டு அடிப்படையில் 4.4 சதவீதம் வளர்ந்து, 2030ல் 5.26 பில்லியன் டாலராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேங்காய் தயாரிப்புகள்

நிறுவனம் முதலில் தேங்காய் மட்டைகளை தருவிக்கிறது. இந்த பொருட்கள் சென்னையில் உள்ள நிறுவன ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அதன் நாறு எடுக்கப்படுகிறது.

நாறுகளில் ஒரு பகுதி கயிறு, தரை விரிப்பு போன்றவற்றுக்காக விற்கப்பட்டாலும், மற்றவை பானைகள், செங்கற்கள், கூடைகள், போன்றவை கோகோ பீட்டில் இருந்து தயாரிக்க பயன்படுகின்றன.

இது தற்போது கிலோ ரூ.15- 18க்கு விற்கப்படுகிறது, பானைகள் ரூ.5 முதல் ரூ.100 வரை, கூடைகள் 50 முதல் 200 வரை விற்கப்படுகின்றன.

துவக்கத்தில் இந்த பொருட்களை தயாரிக்கும் செலவு, பஞ்சாப் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் செலவைவிட குறைவாக இருந்ததாக அனீஸ் கூறுகிறார். இதை சமாளிக்க இந்த பொருட்களை நன்றாக அழுத்த துவங்கினர்.

மூலப்பொருள் நன்றாக கழுவி உலர வைக்கப்பட்டு, இயந்திரத்தில் அழுத்தப்படுகிறது. பின்னர், அனுப்பி வைக்கப்படுகிறது.

நிறுவனம் தனது இணையதளம் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது. தோட்ட பொருட்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் விற்கப்படுகின்றன.

“10 சதவீத வர்த்தகம் இந்தியாவில் இருந்தும் எஞ்சியவை அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து வருகின்றன,“ என்கிறார் அனீஸ்.

இப்போது போட்டி அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இந்தியாவின் டச்சு பிலாண்டின், அமெரிக்காவின் பைபர் டஸ்ட் முக்கிய போட்டியாளர்கள்.

இந்தியாவில் தற்போது நிறுவனம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்கிறது.

வர்த்தகத்தை துவக்க தானும், குடும்பத்தினரும் ரூ.4 லட்சம் முதலீடு செய்ததாக அனீஸ் கூறுகிறார். இந்த முதலீடு இப்போது ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக விற்றுமுதல் ரூ.50 கோடியாக உள்ளது. பெரும்பாலான வர்த்தகம் ஏற்றுமதி மூலம் வருவதாகக் கூறும் அனீஸ், கோவிட் காலம் சவாலாக இருந்தது என்கிறார். சரக்கு கட்டணம் உயர்வு மற்றும் கண்டெய்னர்கள் இல்லாதது மேலும் சிக்கலாக்கியது, என்கிறார்.

இருப்பினும், நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு லாக்டவுனை எதிர்கொண்டது என்கிறார். கோகோ பீட்டை மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்துவதற்கு பதிலாக மண்ணை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்கிறார்.

தோட்டக்கலையில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் பலர் இதன் ஆற்றலை உணர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

“ஆர்கானிக் விவசாயம் மீதான கவனம் அதிகரித்திருப்பதால் இந்த பொருளுக்கான தேவையும் அதிகரிக்கிறது,” என்கிறார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *