Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

எடிசனை விட அதிகக் காப்புரிமைகளை வைத்துள்ள இந்திய விஞ்ஞானி!

தாமஸ் ஆல்வா எடிசனின் 1093 காப்புரிமைகளை முறியடித்து 1,299 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமையை வைத்துள்ளார் இந்திய வம்சாவளி விஞ்ஞானி குர்தேஜ் சந்து.

புதுமைப்பித்தர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள கண்டுபிடிப்புகள் நாம் சவுகர்யமாக வாழ வழியமைத்துள்ளது. மின்காந்தம் பற்றி ஆராய்ந்த நிகோலா டெஸ்லா, டி.என்.ஏ வரிசைப்படுத்துதலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பங்களிப்பு, செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆலன் டூரிங்கின் முன்னேற்றம் என எதுவாக இருந்தாலும், உலகின் சிறந்த மனிதகுலத்தை மாற்றியமைத்த சில முக்கியமான கண்டுபிடிப்புகளை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்தியர்களும் சளைத்தவர்கள் அல்ல. அதிக கண்டுபிடிப்புகளுக்கான தந்தை என்று வரலாற்றில் அறியப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரக்கணக்கான காப்புரிமைகளை வைத்துள்ளார். எடிசனைத் தாண்டிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா?

உண்மை தான் அமெரிக்காவின் இடாஹோவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்தேஜ் சந்து தான் எடிசனின் வரலாற்றை முறியடித்த நாயகன். ஐ.ஐ.டி டெல்லி முன்னாள் மாணவரான சந்து கடந்த 29 ஆண்டுகளாக, 1,299 அமெரிக்க காப்புரிமைகளை பெற்றுள்ளார். இது 1,093 அமெரிக்க காப்புரிமைகளைக் கொண்டிருந்த எடிசனை விட அதிகம்.

58 வயதான சந்து, உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார், தங்களது பெயர்களில் காப்புரிமை பெற்ற இந்தியர்களில் குர்தேஜ் சந்து முன்னணியில் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் சம்பளத்திற்காக பாதுகாப்பான பணியில் ஒட்டிக்கொள்வது என்ற எண்ணத்தை தூக்கி எறிந்ததால் இன்று பலர் பார்த்து வியக்கும் விஞ்ஞானியாக உருவெடுத்திருக்கிறார் இவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வேதியியலாளர்களின் மகனான சந்து 2008ல் கிப்ளிங்கரிடம்,

“நான் மருத்துவத்தை விட பொறியியலை மிகவும் விரும்பினேன், ஏனென்றால் நான் இரத்தத்தோடு பணி செய்ய விரும்பவில்லை,” என்றார்.

ஐ.ஐ.டி டெல்லியில் மின் பொறியாளர் பட்டம் பெற்ற பின்னர் 1990ல் சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் சந்து இயற்பியலில் பி.எச்.டி பெற்றார்.

படித்து முடித்த பின்னர் சந்துவிற்கு 2 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் முன்னணி கம்ப்யூட்டர்-மெமரி தயாரிப்பாளரான டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அவருக்கு பணி அளிக்க முன்வந்தது. மற்றொன்று 11 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மைக்ரான் டெக்னாலஜி ஸ்டார்ட் அப் தனது பேராசிரியரும் வழிகாட்டியுமானவரின் ஆலோசனையின் பேரில், சந்து சிறிய நிறுவனத்தில் பணியாற்ற முடிவெடுத்தார்.

டாப் நிறுவனத்தில் பெரிய இயந்திரங்களுக்கு மத்தியில் பணியாற்றுவதைவிட சிறிய நிறுவனத்தில் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

மூரின் விதியை அடிப்படையாக வைத்து மைக்ரானில் சந்து பணியாற்றத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த சுற்றுகளின் ஒரு பகுதியில் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதை கண்டுபிடித்தார். ஒரு சிப்பிற்குள் எத்தனை மெமரி யூனிட்டுகளை பொருத்த முடியும் என்பன உள்ளிட்ட சில கண்டுபிடிப்புகளுக்கு முதன்முதலில் சந்து காப்புரிமை பெற்றார். இது அவருக்கு ஒரு கண்டுபிடிப்பாளரின் அந்தஸ்தைப் பெற்றது. அன்று தொடங்கிய கண்டுபிடிப்புகளுக்கு அவர் இன்று வரை முற்றுப்புள்ளி வைக்கவே இல்லை.,

உலகெங்கிலும் உள்ள சிப் உற்பத்தியாளர்கள் சந்துவின் காப்புரிமையைப் பயன்படுத்தி வருகின்றனர், அவர்களில் பலர் தொழில்நுட்ப ரீதியாக மைக்ரானுடன் இணைந்து செயல்படுபவர்கள். சந்துவின் கண்டுபிடிப்பால் அந்த நிறுவனங்கள் லாபத்தை அறுவடை செய்கின்றன. சுய-ஓட்டுநர் கார்கள், பிக் டேட்டா மற்றும் IoT , செயற்கை நுண்ணறிவின் வருகை என இவை எதுவும் சந்துவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தடையாக அமையவில்லை. புதுமைகளோடு பயணிக்கத் தொடங்கியதால் சந்துவின் காப்புரிமை பட்டியலும் வளர்ச்சி கண்டது.

கடந்த 15 ஆண்டுகளாக குர்தேஜ் போயஸ் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். குர்தேஜின் வழிகாட்டுதல் குறித்து இடாஹோ ஸ்டேட்ஸ்மேனுக்கு மைக்ரான் ஸ்கூல் ஆஃப் மெடிரியல் சயின்ஸ் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் வில் ஹக்ஸ் கூறுகையில்

“அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவைப் பொறுத்தவரை உலக அளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் மெமெரி துறையில் கால்தடம் பதித்திருக்கிறார்.

அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையைப் பெற்றது மட்டுமல்லாமல், சாம்சங் மற்றும் எஸ்.கே.ஹினிக்ஸ் போன்ற உலகளாவிய அளவில் டிராம் சந்தையில் 95 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள போட்டி நிறுவனங்களுக்கு எதிராக மைக்ரானை குர்தேஜ் சந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல காரணமானவர் என்று பெருமையாக தெரிவித்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *