‘தலைமைப்பொறுப்பு தனிமையாக உணர வைக்கும்’ – இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி!
மதன் மோகங்காவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ‘நான் செய்ய வேண்டியதை செய்தேன்’ என்ற புத்தகத்தை இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி தலைமை என்பது சரியானதைச் செய்வதும், உங்களை எதிர்பார்க்கும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதும் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
மதன் மோகங்காவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ‘I Did What I Had to Do’ என்ற புத்தகத்தை இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி தலைமை என்பது சரியானதைச் செய்வதும், உங்களை எதிர்பார்க்கும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதும் ஆகும், எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அகமதாபாத் முன்னாள் மாணவருமான மதன் மோங்காவின் வாழ்க்கை வரலாற்றான ‘ஐ டிட் வாட் ஐ ஹாட் டு டூ’ என்ற புத்தகத்தை வெளியிட்டு விழாவில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி பங்கேற்றார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மதன் மோங்காவின் வெற்றி ரகசியத்தை பிரபல கிராஃபிக் டிசைனரும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் முன்னிலை வகிப்பவர், கட்டுரையாளர் மற்றும் விளம்பர நிபுணரான அஞ்சனா தத் எழுதியுள்ளார்.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய நாராயண மூர்த்தி,
“இந்த வாழ்க்கை வரலாற்றை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதனின் கதை, ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் உத்வேகத்தையும் வழங்கும். செயலில் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர், அவரது வாழ்க்கை வரலாற்றிற்கு “நான் செய்ய வேண்டியதை செய்தேன்” என்று பொருத்தமாக தலைப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவரது வாழ்க்கை, அவரது வணிக புத்திசாலித்தனம் மற்றும் பின்தங்கியவர்களுக்கான கல்விக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பற்றி நான் மிகவும் ரசித்தேன்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
மதன் மோகங்காவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் அவரது ஆரம்பகால வாழ்க்கை, ஐஐஎம் அகமதாபாத்தில் அவர் படித்தது, தொழிலதிபராக வாழ்க்கையைத் தொடங்கியது, நெருக்கடி காலங்களில் முடிவெடுக்கும் திறன், அவர் சந்தித்த சவால்கள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெற்றியை அடைவதற்கு அவர் கையாண்ட உத்திகள் என பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
தலைமைத்துவம் தனிமையை உணர வைக்கும்:
தலைமைத்துவம் என்பது சரியானதைச் செய்வதும், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதும் ஆகும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றிய அவர்,
“தலைமைப் பொறுப்பு ஒருவரை முற்றிலும் தனிமையாக உணரச் செய்கிறது. நான் அதை அனுபவித்திருக்கிறேன். ஆனால், இப்போது அதை கடந்துவந்துவிட்டேன். அதை மதனும், இப்போது அவருடைய மகன் மெஹுலும் நிச்சயமாக உணர்ந்திருப்பார்,” எனக்கூறியுள்ளார்.
மதன் மோகங்கா 1976ல் தேகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை நிறுவி அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அவரது மகன் மெஹுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், குழும தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
“தலைமை என்பது சரியானதைச் செய்வது ஆகும். வழிகாட்டுதலுக்காக உங்களைத் தேடும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வளர்ப்பது. என் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும், அடுத்து என்ன நடக்கும், அவர்களின் படிப்பு, என் பெற்றோரின் உடல்நிலை என்னவாகும், அடுத்த மாதம் எனது வீட்டு வாடகையை எப்படி செலுத்துவேன் போன்ற எண்ணங்களுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவது ஒரு தலைவரின் பொறுப்பாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான தலைப்பு:
மதன் மோகங்காவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு சரியான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
“பாதை கடினம் என்று எனக்குத் தெரியும், ஏறுவது எளிதல்ல என்று எனக்குத் தெரியும், நான் கண்டுபிடிக்கும் அளவுக்கு மேலே செல்வேன் என்று எனக்குத் தெரியும், ஆனால், படிப்படியாக சுவாசிப்பது மிகவும் கடினமாகிறது. ஆனால் நீங்கள் உச்சத்தை அடைகிறீர்கள். இந்த புத்தகம் அதைவிட பல மடங்கு செய்துள்ளதை உணரும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” எனக்கூறிப்பிட்டுள்ளார்.
மதன் மோகங்கா அழகான வானவில் மற்றும் மலைகளை அடைவோம் என ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை எவ்வாறு வழிநடத்தி சாதனை படைத்தார் என்பதை புத்தகம் தெளிவாக விளக்கியுள்ளதாக நாராயண மூர்த்தி புகழ்ந்துரைத்துள்ளார்.
தமிழில்: கனிமொழி