Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

யூடியூப் சேனலை தொடங்கி மாதம் ரூ.5 கோடி வருவாய்க்கு வித்திட்ட இளைஞர்!

வேதாந்தா லாம்பா என்ற இளைஞர் தனது 24 வயதில் யூடியூப் செனல் ஒன்றைத் தொடங்கி, ‘மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்ப்ளேஸ்’ (Mainstreet Marketplace) என்ற ஆன்லைன் ஸ்னீக்கர் வகை ஷூ விற்பனை சாம்பிராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பி, அதன்மூலம் மாதந்தோறும் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.

2017-ஆம் ஆண்டில் வேதாந்தா லாம்பா என்ற இளம் தொழில்முனைவோர் யூடியூப் சேனல் மூலம் டிஜிட்டல் பயணத்தைத் தொடங்கினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் குறிப்பிட்ட அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்த முயற்சியானது விரைவில் மிகவும் வெற்றிகரமான வணிக முயற்சியாக மாற்றப்படுவதற்கான தொடக்கமாகும் என்பதை லாம்பாவே அப்போது அறிந்திருக்கவில்லை.

இரண்டு வருடங்கள் பல்வேறு தொழில்முனைவுக்கான தெரிவுகளை ஆராய்ந்த பிறகு, ஸ்னீக்கர் வகை ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மீதான தனது ஆர்வத்தை லாம்பா கண்டுபிடித்தார். இந்த புதிய ஆர்வம் ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்ல, தொழில்முனைவோர் வாய்ப்புக்கான சாளரத்தை அவருக்குத் திறந்துவிட்டது.

‘மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸ்’ நிறுவியதன் மூலம் அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டார். ஸ்னீக்கர் வகை ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மீது ஆர்வமுள்ளவர்களின் ஒரு வர்த்தக மையமாகவே இது விரைவில் வளர்ந்தது. 24 வயதிலேயே லாம்பாவின் வணிக புத்திசாலித்தனம் அவரது சேனல் ‘மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸின்’ அளவு மற்றும் வெற்றியில் தெளிவாகத் தெரிகிறது.

இந்நிறுவனம் 3,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் பட்டியலைக் கொண்டுள்ளது, ஸ்னீக்கர்களைத் தாண்டி பலவிதமான டி-ஷர்ட்கள் மற்றும் ஹூடிகளையும் சந்தைப்படுத்தியது. தயாரிப்புகளில் உள்ள இந்த பன்முகத்தன்மை, கணிசமான மாதாந்திர வருவாயை ஈட்டி, 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை பெற்றுத் தந்தது.

முதலீட்டை ஈர்த்த இளைஞர்!

மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வர்த்தக ஆதாரங்கள் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, $2 மில்லியன் முதலீட்டை ஈர்த்தது. இந்த ஆரம்ப முதலீட்டுச் சுற்றில் Zomato-வின் CEO தீபிந்தர் கோயல், Zerodha-இன் இணை நிறுவனர் நிகில் காமத் மற்றும் புகழ்பெற்ற ராப்பர் பாட்ஷா போன்ற முக்கிய நபர்கள் இருந்தனர். இந்த மூலதனப் பெருக்கம் வணிகத்தை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் சென்றது.

மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸ் முதலீட்டாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் மற்றும் கரண் ஜோஹர் போன்ற பிரபலங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர்களையும் ஈர்த்துள்ளது.

மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் வெற்றிகரமாகத் தங்களை நிறுவி 50,000-க்கும் மேற்பட்ட ஸ்னீக்கர்களின் விற்பனை நடந்தேறியது.

தற்போது, ​​மெயின்ஸ்ட்ரீட் மார்க்கெட்பிளேஸ் மும்பையில் இரண்டு பிசினஸ் ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. அத்துடன், நான்கு கூடுதல் கடைகளும் திறக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொட்டும் வருவாய்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்னீக்கர் கலாச்சாரத்தில் ஸ்னீக்கர்களை மறு விற்பனை செய்யும் வணிக மாதிரி புதுமையானதாகவும் லாபகரமானதாகவும் அமைந்தது ஒரு சாதாரண முயற்சியின் பெரு வெற்றியின் கதையாகும்.

2023-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.24 கோடி வருவாய் ஈட்டியது. 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.100 கோடி வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

வேதாந்தா லாம்பாவின் பயணமும் அவரது தொழில் வெற்றிக்கும் பின்னணியில் பெரிய படிப்பு இல்லை என்பதுதான் ஆச்சரியம். உயர்நிலை பள்ளிப்படிப்பை துறக்கும் பெரிய துணிச்சல் முடிவை அவர் எடுத்தார். கல்லூரிப் படிப்பிலும் இவரது கவனம் செல்லவில்லை. ஆனால், இந்த முடிவு இவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததற்குக் காரணம், அவரது விடா முயற்சி.

சாதாரண யூடியூப் சேனலை வர்த்தகச் சந்தையாக மாற்றி, அதன் மூலம் மாதம் ரூ.5 கோடி ஈட்ட முடியும் என்பதற்கு கடின உழைப்பும் உறுதியும் நேர்மையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதுமானது, படிப்பு இருந்தால்தான் இவை கிடைக்கும் என்பதற்கு நேர் மாறான ஒரு தொழில் வாழ்க்கையின் உத்வேகத்தைப் பறைசாற்றுகிறது.

மூலம்: Nucleus_AI

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *