Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

தினமும் 20 நிமிட வேலை: வருடத்திற்கு ரூ.3.8 கோடி சம்பாதிக்கும் 26 வயது இளைஞர்!

சிலர் தினமும் 10-12 மணி நேரம் உடலை வருத்தி வேலை பார்த்தாலும், குறைவான வருவாய்தான் பெறுவார்கள். ஆனால், ஸ்மார்ட்டாக சிந்திப்பவர்களோ அதிக உடல் உழைப்போ, நேர விரயமோ இல்லாமல் அதிகமாக வருவாய் ஈட்டி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஆர்லான்டோவைச் சேர்ந்த 26 வயதான ஃபிரான்சிஸ்கோ ரிவேரா.

ஆன்லைன் தந்த தைரியம்

ஆன்லைன் டியூட்டராக பார்ட் டைமாக வேலை பார்த்து வந்த ரிவேரா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம், தன்னுடைய வேலையில் பின்னடைவு ஏற்படவே, இனி வேலையை நம்பி பிரயோஜம் இல்லை என புதிய தொழில் தொடங்க முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் (POD) யூடியூப் வீடியோவைப் பார்த்த ரிவேரா, அதனால் கவரப்பட்டு தானும் ஆன்லைனில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது எனத் திட்டமிட்டார்.

அப்போது உதித்ததுதான் ஆர்கானிக் மெழுகுவர்த்தி விற்பனை தொழில். தனது தொழிலுக்கான அனைத்து திட்டங்கள் மற்றும் கருவிகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றார் ரிவேரா. வடிவமைப்புக்காக Canva போன்ற கருவிகளையும், டிசைன்கள், ஆன்லைன் பட்டியல்கள் மற்றும் வெளிப்புற உற்பத்தி போன்ற POD சேவைகளுக்கு Printify-யும் பயன்படுத்தத் தொடங்கினார்.

ரூ. 3.8 கோடி வருமானம்

குறைந்த காலத்திலேயே, ரிவேராவே எதிர்பார்க்காத வகையில், அவரது Etsy கடையானது கட்டணங்கள் மற்றும் மார்க்கெட் செலவு போக 30 முதல் 50 சதவீதம் வரையிலான லாபத்தை தரத் தொடங்கியது. இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் தனது தொழிலுக்காக, அவர் இணையத்தில் ஆராய்ச்சி செய்ய, மற்றும் வடிவமைக்க என ஒரு நாளைக்கு வெறும் 20 நிமிடங்களை மட்டுமே செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு வெளிச்சம் தருவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மெழுகுவர்த்திகள் தற்போது வாசனை தரும் விளக்குகளாகவும், பரிசுப் பொருட்களாகவும் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் மெழுகுவர்த்திகளை வித்தியாசமான வடிவங்களில் வாங்கவும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதன் காரணமாகவே புத்திசாலித்தனமாக இந்தத் தொழிலை தேர்வு செய்துள்ளார் ரிவேரா.

தனது Etsy மூலம் ஒரே வருடத்தில் 4,62,000 டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளார் ரிவேரா. இந்திய மதிப்பு படி, இது தோராயமாக 3.8 கோடி ரூபாய் ஆகும்.

சவால்களும் சகஜம்

“இதற்கு முன்பு இந்த அளவிற்கு நான் அதிகம் சம்பாதித்ததே இல்லை. முன்னதாக நான் செய்த வேலையை விட இப்பொழுது மிகக் குறைவாக வேலை செய்கிறேன். ஆனால் பன்மடங்கு லாபம் ஈட்டு வருகிறேன்,” என தனது தொழில் பயணம் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரிவேரா.

என்னதான் லாபம் அதிகமாக இருந்தாலும், மற்றத் தொழில்களைப் போலவே இந்தத் தொழிலும் அதிக போட்டிகள் இருப்பதாகக் கூறும் ரிவேரா, தான் உருவாக்கக்கூடிய அதே டிசைன்களை வேறு பலரும் நகலெடுத்து வெளியிடுவது போன்ற ஒரு சில சவால்களையும் தான் சந்தித்து வருவதாக கூறுகிறார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *