Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

4 ஆண்டுகளில் 35 விற்பனை நிலையங்கள்


பஞ்சாபின் லூதியானாவில் கியான் சிங் குடும்பம், 1975 முதல், பின்னலாடைச் சார்ந்த ஆஸ்டர் குழுமத்தை (Oster Group) நடத்தி வருகிறது. துவக்கத்தில் ரஷ்ய சந்தையை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும், இரண்டாம் தலைமுறையில் மற்ற பிரிவுகளிலும், குறிப்பாக 2000ல் இல்ல பர்னீச்சர் பிரிவிலும் நுழைந்தது.

இந்த தருணம் நிறுவன வளர்ச்சிப்பாதையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. படுக்கை விரிப்புகள், மென் பொம்மைகள், விளையாட்டு விரிப்புகள், குஷன்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனம், ஐகியா (IKEA) மதர்கேர் உள்ளிட்ட முன்னணி சிறார்கள் வாழ்வியல் நிறுவனங்களுக்கான மூல தயாரிப்பு நிறுவனமாக (OEM) மாறியது.

2009ல், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சிங், நிறுவனத்தில் இணைந்த போது அதன் பிரதான நோக்கம், மூல தயாரிப்பு பிரிவை வளர்ப்பதாக இருந்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு மூன்று முக்கிய பிரிவுகளில் நிறுவனம் சீரமைப்பை எதிர்கொண்டது. பி2பி பிரிவில் இல்ல ஃபர்னீச்சர்களில் ஜவான் அண்ட் சன்ஸ் தாய் நிறுவனத்தின் மூலம் கவனம் செலுத்துவது என சிங் தீர்மானித்தார்.  

இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சி காரணமாக 2019ல், பி2பி வர்த்தகத்தை, நுகர்வோர் பிரிவிலும், வளர்க்க விரும்பி MiArcus பிராண்டை துவக்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த சிறார் பிராண்ட், மினி கிளப், சிக்கோ, பேபி ஹக் உள்ளிட்ட பிராண்ட்களுக்கு போட்டியாக தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.

மைஆர்கஸ், மாதாந்திர வருவாயாக ரூ.6 கோடி பெற்றிருப்பதாகவும், 24 நிதியாண்டில் ரூ.80 கோடி எதிர்பார்ப்பதாகவும் எஸ்.எம்.பிஸ்டோரியிடம் பேசிய கியான் சிங் கூறுகிறார்.

பல கோடி வர்த்தகம்

இந்தியாவில் சிறார் பிராண்ட்கள் அநேகம் இருந்தாலும், எல்லா சிறார்களுக்கும் ஏற்றவற்றை ஒரே குடையின் கீழ் காண்பது சவாலானது என்கிறார்.

“மால்கள் சிறப்பாக உள்ளன. ஆனால், ஒரு கடையில் இருந்து இன்னொரு கடைக்கு அலைய வேண்டும். ஏற்கனவே சிறுவர்களுக்கான பி2பி சந்தையில் இயங்கியதால், நுகர்வோர் பிரிவிலும் நுழைந்தால் என்ன என நினைத்தோம்,” என்கிறார் கியான் சிங்.

தரத்தில் தனி கவனம் செலுத்தும் MiArcus தற்போது, குழந்தைகளுக்கான பர்னீச்சர், காலனி, டயாப்பர் பைகள், பொம்மைகள் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் பொருட்களை வழங்குகிறது. அண்மையில் மகப்பேறு பிரிவிலும் நுழந்தது.

சிறார் ஆடைகளை பொருத்தவரை, விலை ரூ.269 முதல் ரூ. 3,499 ஆக அமைகிறது.

“MiArcus நர்சரி பொருட்களில் கவனம் செலுத்துவதால், குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளோம். எங்கள் சந்தை வட இந்தியாவாக அமைகிறது. அதற்கேற்ப மூன்றாண்டுகளுக்கு முன் லூதியானாவில் ஒரு விற்பனை நிலையம் என்பதில் இருந்து, 35 இணை உரிமையாளர் மையங்களாக விரிவாக்கம் செய்துள்ளோம். தில்லி, சிம்லா, லக்னோ, உதய்பூர், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் இவை அமைந்துள்ளன,” என்கிறார்.

இந்த பிராண்ட் சொந்த இணையதளம் தவிர அமேசான், ஃபர்ஸ்ட்கிரை மூலமும் விற்பனை செய்து வருகிறது.

தாய் நிறுவனம் ஜவான் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் 2001 முதல் இல்ல ஃபர்னீச்சர்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்று கூறுபவர் இந்த சிறார் பிராண்ட் டி2சி பிரிவிலும் விரிவாக்கம் செய்ய உள்ளது என்கிறார்.

“இந்திய சந்தை இப்போது விரிவாக்கத்திற்கு மிகப்பெரியதாக இருக்கிறது. அரபு குடியசு, ரஷ்யாவில் இருந்தும் வாய்ப்பு வருவதாகவும், அவற்றை நிராகரிக்க வேண்டியிருக்கிறது,” என்றும் கூறுகிறார்.

சவால்கள், வாய்ப்புகள்

சிறார் பிராண்ட் பிரிவில் நீடித்த வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகக் கூறுபவர், ஆடைகள் பிரிவில் அமைப்புசாரா துறையினரிடம் இருந்து போட்டி இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்திய சிறார் ஆடைகள் சந்தை 2023ல் 21.6 பில்லியன் டாலராக இருந்தது என IMARC அறிக்கை தெரிவிக்கிறது. இது 2032ல் 26.5 பில்லியன் டாலாராக வளரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“ஆடைகள் எங்கள் விற்பனையில் 50 சதவீதமாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கிறது,” என்கிறார் கியான் சிங். இந்த பிரிவில் ஹாம்லேஸ் மிகப்பெரிய நிறுவனம் என்கிறார்.

MiArcus தயாரிப்பு தாய் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இதன் 10 சதவீத SKU மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான அனைத்து தேவைகளுக்கான பிராண்டாக விளங்க நிறுவனம் விரும்புகிறது.

“அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 விற்பனை நிலையங்கள் துவங்கி, வர்த்தகத்தை விரிவாக்கி மாதாந்திர வருவாயாக ரூ.10 கோடி மற்றும் விற்றுமுதலாக ரூ.120 கோடி அடைய விரும்புகிறோம்,” என்கிறார் கியான் சிங்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *