Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

13 ஜனாதிபதி விருதுகள்; 2 பத்மஸ்ரீ – 200 கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்த மகத்தான மனிதர்!

நூற்றுக்கணக்கான குறிப்பிடத்தக்க புத்தாக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர உறுதுணை புரிந்துள்ள ஓய்வுபெற்ற பிரிகேடியர் கணேஷாமின் முன்னெடுப்புகள் மலைக்கத்தக்கவை.

நம் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் புத்திசாலித்தனமான பயன்பாட்டுச் சாதனங்களுக்குப் பின்னால் உள்ள 200-க்கும் மேற்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிய வகை செய்யும் விதமாக இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார், ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.கணேஷாம்.

நூற்றுக்கணக்கான குறிப்பிடத்தக்க புத்தாக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர பிரிகேடியர் கணேஷாம் உறுதுணையாக இருந்துள்ளார். தொடர்ந்து தன் முன்னெடுப்புகளில் தீவிரத்துடன் இயங்கி வருகிறார்.

முன்னெடுப்பின் பின்னணி

ராணுவத்தில் இருக்கும்போது வீரர்கள் எவ்வளவோ கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு பல புத்திசாலித்தனமான உத்திகளைக் கண்டுப்பிடிப்பார்கள். இதை அருகில் இருந்து பார்த்த பிரிகேடியர் கணேஷாம், இத்தகைய அத்தியாவசிய அன்றாடப் பிரச்சினைகளை எளிதாக்கும் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்தார்.

ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.கணேஷாம் எப்போதும் தன் பணியை நோக்கிய இலக்கு கொண்டவர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு புதுமைப் புகுத்தும் புத்தாக்க கண்டுப்பிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களைத் தேடுவதை தன் முழுமுதற் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்.

இந்திய ராணுவத்திலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறக, 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘பல்லே ஸ்ருஜனா’ (Palle Srujana) என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் கிராமப்புறத் திறமையாளர்களைக் கண்டுப்பிடிக்க ஷோதா யாத்திரைகளை மேற்கொண்டார்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை எளிதாக்கும் புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளும் கண்டுப்பிடிப்பாளர்களின் தயாரிப்புகளை அடையாளம் கண்டு, அது மக்களிடம் பரவலாகச் சென்றடைய உதவுவதும், இத்தகைய புதிய கண்டுப்பிடிப்புகள் அதிகரிக்க உதவுவதுமே இவரது பணியாக இருந்து வருகிறது.

18 ஆண்டுகளாக பயணம்

கணேஷாம் தனது சீரிய முயற்சியினால் கடந்த 18 ஆண்டுகளில் கிராமப்புற புதிய கண்டுப்பிடிப்பாளர்கள் 200 பேரைக் கண்டுப்பிடித்து உதவியுள்ளார். இதில் முக்கியமாக ஒருவரைக் குறிப்பிட வேண்டுமெனில், பொச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் நெய்யும் லஷ்மி ஏஎஸ்யு எந்திரத்தைக் கண்டுப்பிடித்த சிந்தாகிண்டி மல்லேஷாம் என்பவரைச் சொல்லலாம். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த எந்திரம் பட்டுச் சேலைகள் நெய்யும் நேரத்தையும் உழைப்பின் அளவையும் குறைத்த அற்புதக் கண்டுப்பிடிப்பு இது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், கவச போர் வாகன நிபுணரான கணேஷாம், ராணுவ வீரர்களில் இத்தகைய புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் இருப்பதையும், அவர்களது புத்திகூர்மையையும் முதன்முதலில் கண்டறிந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

கணேஷாம் இதுவரை கண்டறிந்த 200 புத்தாக்க தயாரிப்புகளில் 26 தயாரிப்புகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. 24 தயாரிப்புகளுக்கு காப்புரிமைகள் உள்ளன. 13 தயாரிப்புகள் ஜனாதிபதி விருதுகளையும், 2 பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளன. இந்த அனைத்து புதுமைகளின் மாதிரிகளும் செகந்திராபாத்தில் உள்ள வாயுபுரியில் உள்ள பிரிகேடியர் கணேஷாம் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“நாங்கள் தேசிய கண்காட்சிகள் மற்றும் போட்டிகளில் பிரகாசிக்க புதுமைப் புகுத்தும் கண்டுப்பிடிப்பாளர்களுக்கு உதவினோம். மேலும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான கடன்களையும் பெற்றுத் தருகிறோம். இன்றுவரை அவர்களுக்காக கிட்டத்தட்ட ரூ.4 கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுத் தரமுடிந்தது.”

இவ்வாறு பெருமிதம் பொங்கும் கணேஷாமின் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடிக்கும் பயணம் தொடர்கிறது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *