Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

சென்னை சமூக ஊடக தளம் Pepul 4மில்லியன் டாலர் நிதி திரட்டியது!

சென்னையைச் சேர்ந்த சமூக ஊடக ஸ்டார்ட் அப் நிறுவனம் ’பீபுல் டெக்’ (Pepul Tech Pvt Ltd) ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக 4 மில்லியன் டாலர் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதி வளர்ச்சி நோக்கில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பீபுல் டெக் நிறுவனம் இதுவரை, 5.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. அதன் சேவை மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது உணர்த்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிதியை, பீபுல் பி2சி மேடை மற்றும் சாஸ் சேவையான ’ஒர்க்பாஸ்ட்.ஏஐ’ (Workfast.ai) ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு தமிழ்நாட்டில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க குடும்ப அலுவலகத்தால் செய்யப்பட்டுள்ளது, அதோடு மேலும் பல முதலீட்டாளர்களும் இதில் அடங்குவர். எனினும், அந்த குடும்ப அலுவலகத்தின் பெயரை பீபுல் வெளிப்படுத்தவில்லை.

பீபுல் நேர்நிறையான சமூக ஊடக மேடையாக அறிமுகம் ஆகி, தொழில்முறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான நேர்நிறை சமூக செயலியாக உருவெடுத்துள்ளது. பார்வையாளர்கள் பற்றிய புரிதல் அடிப்படையில் இது செயல்படுகிறது.

பயனர்கள் தற்போது நம்பகமான வளமாக இந்த சேவையை அணுகுகின்றனர் என்றும், வழிகாட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிலை வாய்ப்புகளை கண்டறிய பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு நிறுவனமான ட்ராக்ஸ்ன்-ன்படி, பீபுலின் தற்போதைய முதலீட்டாளர்களில் ஹவர்கிளாஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் கிரிஷ் மத்ருபூத்தம் உள்ளிட்டோர் அடங்குவர்.

“பல சிறந்த தொழில்முனைவோர்கள் மற்றும் நம்பகமான முதலீட்டாளர்கள் எங்கள் ஆர்வமுள்ள குழுவினர் மற்றும் எங்கள் தொலைநோக்கு பார்வை மீது நம்பிக்கை வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் அலுவலகம் மற்றும் குழுவைப் பார்வையிட்ட பிறகு சில சந்திப்புகளில் இந்த நிதி திரட்டப்பட்டது,” என்று பீபுலின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் ஜி கூறினார்.

Workfast.ai:

தகவல் தொடர்பு, கூட்டு முயற்சி மற்றும் திட்ட நிர்வாகத்தை சீராக்கும் தேவையின் அடிப்படையில் உருவான இந்த சேவை, ஸ்லேக் மற்றும் அசானா போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்தும் போது உண்டாகும் சவால்களுக்கு தீர்வாக அமைகிறது.

அறிமுகம் ஆன பிறகு, இதே தேவையை உணர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆதரவை பெற்றுள்ளது.Workfast.ai மேடை. இது திட்டங்களை நிர்வகிக்க மற்றும் பணிகளை கையாள உதவுகிறது. தற்போதைய நிதியை இந்த இரண்டு சேவைகளையும் மேலும் வளர்த்தெடுக்க நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *