Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

ஒரு ரிக்‌ஷாக்காரன் பீகாரின் ஸ்டார்ட்-அப் நாயகனாக உருவான கதை!

கடின உழைப்பும், பொறுமையும் இருந்தால் வெற்றி என்ற பரிசு நிச்சயம் கைகூடும் என்பதை நிரூபித்துள்ள தில்குஷ் குமாரின் உத்வேகமூட்டும் கதையைப் பற்றி அறிந்து கொள்வோம்…

கடின உழைப்பும், பொறுமையும் இருந்தால் வெற்றி என்ற பரிசு நிச்சயம் கைகூடும் என்பதை நிரூபித்துள்ள தில்குஷ் குமாரின் உத்வேகமூட்டும் கதையைப் பற்றி அறிந்து கொள்வோம்…

ரிக்‌ஷாக்காரன் ஒரு நாள் பீகாரின் ஸ்டார்ட்அப் ஐக்கானாக மாறுவான் என்று யார் யூகித்திருப்பார்கள்?

உழைக்க வேண்டும் என்ற வைராக்கியமும் உறுதியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை உலகிற்கு உணர்த்திய தில்குஷ் குமாரின் கதை இது…

ரிக்‌ஷாக்காரன் டு ஸ்டார்ட்அப் நிறுவனர்:

பீகார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தில்குஷ் குமார், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாகவும், பட்டப்படிப்பு இல்லாததாலும் ரிக்‌ஷா ஓட்டுநராகவும், காய்கறி விற்பவராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆனால், தில்குஷிக்கு தனது சொந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. எனவே, நிறுவனத்தை வழிநடத்தத் தேவையான வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பெற, ஒரு பணியில் சேர வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காக பல நிறுவனங்களில் வேலை தேடி நேர்காணல்களில் பங்கேற்றார். ஆனால், எங்கும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் தனக்கான சொந்த நிறுவனத்தை தானே உருவாக்க முடிவெடுத்தார்.

மாத்தி யோசித்த ரிக்‌ஷா ஓட்டுநர்:

தில்குஷ் குமாரின் மனதில் மிகப்பெரிய திட்டங்கள் இருந்தாலும், ஆரம்பத்தில் பீகார் மக்களுக்கு பலனளிக்கும் வகையில், டாக்ஸி சேவையை வழக்க முடிவெடுத்தார். அப்படித்தான் ‘ரோட்பெஸ்’ (RodBez) உருவானது.

தில்குஷ் தன்னிடம் இருந்த டாடா நானோவை வைத்துக்கொண்டு RodBez தொடங்கினார். ரோட்பெஸை அறிமுகப்படுத்திய ஆறு முதல் ஏழு மாதங்களுக்குப் பிறகு தில்குஷ் மற்றும் அவரது குழுவினர் 4 கோடி ரூபாய் நிதி திரட்டினர். நிறுவனம் ஆரம்பத்தில் பாட்னாவிலிருந்து பீகாரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சேவையை வழங்கியது. இது இரண்டாம் கட்டத்தில் பீகாரில் உள்ள ஒவ்வொரு நகரங்களை இணைத்து சேவை வழங்க ஆரம்பித்தது.

இது ஓலா, உபெர் போன்ற வழக்கமான டாக்ஸி சேவை நிறுவனம் கிடையாது. இது வாடிக்கையாளர்களை டாக்ஸி டிரைவர்களுடன் இணைக்கும் டேட்டாபேஸ் நிறுவனமாகும், மேலும், 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைதூர வெளியூர் பயணத்திற்கு வாகனங்களை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட தூர பயணத்திற்காக ‘ஒன்வே ட்ரிப்’ சேவைகளை வழங்குகிறது. அப்படி ஒரு வழி மட்டும் செல்லும் கார் சேவைகளுக்கு, இருவழிப் பயணக் கட்டணம் அல்லது கார் திரும்ப செல்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. கார்பூலிங், டாக்ஸி பூலிங் மற்றும் ஒரு வழி (ட்ராப் டாக்சி) சவாரிகள் ஆகிய பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

ஓட்டுநர்களை கவர்த்திழுக்கும் திட்டங்கள்:

தில்குஷ் எதிர்காலத்தில் தனது ரோட்பெஸ் சேவையை பீகாரைத் தாண்டியும் விரிவுபடுத்த உள்ளார்.

ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு திட்டம் தான் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக இதில் உள்ளது. தில்குஷ் ஓட்டுநர்களின் சூழ்நிலைகளை அறிந்திருக்கிறார். எனவே, நிறுவனம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை சம்பளமாக தருகிறது.

கல்வியறிவு இல்லாததால் காவலர் பணிக்கு மறுக்கப்பட்ட தில்குஷ் தற்போது, தனது ரோட்பெஸ் நிறுவனத்தில் பல ஐஐடி கவுகாத்தியில் படித்த பட்டதாரிகளையே பகுதி நேர பணியாளர்களாகப் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

தகவல் உதவி – இந்தியா டைம்ஸ் | தமிழில் – கனிமொழி

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *