Sweet Karam Coffee
ஃபயர்சைடு வென்சர்ஸிடம் இருந்து 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை ‘ஸ்வீட் காரம் காபி’
சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய ஸ்னேக் பிராண்டான ஸ்வீட் காரம் காபி, பயர்சைடு வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது
சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய ஸ்னேக் பிராண்டான ‘ஸ்வீட் காரம் காபி‘, Fireside Ventures நிறுவனத்திடம் இருந்து, 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிதியை விரிவாக்கம், புதிய பூகோள பகுதிகளில் நுழைவது மற்றும் பிராந்தியம் சார்ந்த பொருட்கள், சேவையை வலுவாக்கிக் கொள்வதில் பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய உணவு சார்ந்த தொழில்நுட்பப் பரப்பில் ஸ்வீட் காரம் காபி தனித்து விளங்குகிறது. பாட்டியின் உணவு சுவையை சமகால தன்மையோடு வழங்கு இந்த நிறுவனம் வளர்ச்சி ச்Sச்ச்ச்பெற்றுள்ளது.
Sweet Karam Coffee பற்றி
2020ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனந்த் பரத்வாஜ், நளினி பார்த்திபன் தம்பதி மற்றும் ஸ்ரீவத்சன் சுந்தர்ராமன், வீர ராகவனால் துவக்கப்பட்ட ’ஸ்வீட் காரம் காபி,’ தென்னிந்திய ஸ்னேக் பிரிவில் உள்ள இரண்டு முக்கிய அம்சங்களை மனதில் கொண்டுள்ளது.
பாம் ஆயில் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் இல்லாத பாரம்பரிய உணவுகளை நல்ல பேக்கிங்கில் வழங்குகிறது. மேலும், இளம் தலைமுறை ஸ்னேக் தேர்வாக இந்திய உணவுகளை விட மேற்கத்திய உணவுகளை நாடுவதையும் எதிர்கொள்கிறது.
தற்போது இந்நிறுவனம், பாரம்பரிய தென்னிந்திய இனிப்புகள், ஸ்னேக்சை வழங்கி வருகிறது. புகழ்பெற்ற பில்டர் காபி, உடனடி உணவு வகைகள் தவிர மற்ற ஸ்னேக்ஸ்களையும் வழங்குகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள உணவுகளோடு, விரைவில் கர்நாடகா மற்றும் ஆந்திரா உணவுகளையும் வழங்க உள்ளது.
‘ஸ்வீட் காரம் காபி‘ தனது சொந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் வளர்ச்சி அடைந்து, இந்தியா தவிர 32 நாடுகளில் சேவை அளிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் விவசாயிகளுடன் இணைந்து, சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளை நேரடியாக வழங்குகிறது. பெண் சமையல் கலைஞர்களையும், இல்ல சமையல் கலைஞர்களையும் ஆதரித்து வருகிறது.
“ஆர்வம், நோக்கம், அதிகாரம் அளிப்பது ஆகிய அம்சங்கள் எங்களை இயக்குகின்றன. தென்னிந்திய உணவு வகைகளை கொண்டுடாடும் வகையில் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை நவீனமாக வழங்க விரும்புகிறோம். தென்னிந்திய சுவையை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறோம். இப்போது, பயர்சைடு ஆதரவுடன் தென்னிந்திய உணவுக்கு அடையாளமாக விளங்கும் தென்னிந்திய நுகர்வோர் ஸ்னேக் பிராண்டாக வலுப்பெற விரும்புகிறோம்,” என இணை நிறுவனர் நளினி பார்த்திபன் கூறியுள்ளார்.
Sweet Karam Coffee team. Image credit: Sweet Karam Coffee
இந்நிறுவனம் நல்ல உணவுப் புரட்சியை தனது சேவை மூலம் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
“ஸ்வீட் காரம் காபியை பாரம்பரிய இந்திய உணவுப்பிரிவில் வலுவான பிராண்டாக உருவாக்கி வரும் நிலையில், நளினி மற்றும் ஆனந்த் குழுவுடன் இணைந்து செயல்படுவது உற்சாகம் அளிக்கிறது.தூய்மையான பொருட்கள் கொண்டு உருவாக்கப்படும் நல்ல தென்னிந்திய உணவுக்கான வாய்ப்பு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அபிரிமிதமாக உள்ளது,” என்று பயர்சைடு வென்சர்ஸ் இணை நிறுவனர் பார்ட்னர் வி.எஸ்.கண்ணன் சீதாராம் தெரிவித்துள்ளார்.