Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஸ்வீட் – மாற்றி யோசித்து லாபம் அள்ளும் இளம்பெண்!


தனது 13 வயதில் பிசிஓஎஸ் பாதிப்புக்கு ஆளான ப்ரியாஷா சலுஜா தனது ஸ்வீட் க்ரேவிங்கை தீர்த்துக் கொள்வதற்காக உடல்நிலையை மோசமாக்காத ஸ்நாக்ஸ்களை தயாரிக்கத் தொடங்கி, பின்னாளில் அதையே தொழிலாக்கி ‘தி சினமன் கிச்சன்’ (The Cinnamon Kitchen) எனும் பெயரில் லட்சங்களில் வருவாய் ஈட்டும் பிராண்டாக மாற்றியுள்ளார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்வீட் மீதான ஆசை இருந்தாலும் நாவினைக் கட்டுப்படுத்தி ஆசையினை துறந்துவிடுகின்றனர். உண்மையில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு பண்டங்களே உண்ணக் கூடாது என்பதில்லை. அதனை முறையாகவும் ஆரோக்கியமான வழியிலும் உட்கொள்ள வேண்டும்.

அந்த வழிகளை சிறு வயதிலிருந்தே தேட தொடங்கினார் ப்ரியாஷா சலுஜா. ஏனெனில் 13 வயதிலே பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்ட அவருக்கு பல உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஓர் உணவுப் பிரியராக பல சந்தர்ப்பங்களில் வாய்க்கட்டு போடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது.

தனது பிரச்னைக்கான தீர்வின் தேடலில் இறங்கிய ப்ரியாஷா, இறுதியில் ஹெல்தியான ஸ்னாக்ஸ்களை அவரே செய்யத் தொடங்கி, வெற்றிகரமான தி சினமன் கிச்சன் எனும் பிராண்டையும் தொடங்கினார்.

தி சினமன் கிச்சனானது 100 சதவீதம், குளுட்டன் ப்ரீ, பதப்படுத்தும் பொருட்கள் இல்லாமல். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்காமல் மற்றும் மைதா மாவு பயன்படுத்தாமல், தாவர அடிப்படையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்கிறது. டெல்லியை தளமாகக் கொண்ட பிராண்ட் குக்கீகள், சிப்ஸ், கேக்குகள், ரொட்டி மற்றும் பல தயாரிப்புகளையும் தயாரித்து வழங்குகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஸ்வீட்!

நொய்டாவைச் சேர்ந்த பிரியாஷா, டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் முடித்துள்ளார். பட்டம் பெற்ற பிறகு, PwC நிறுவனத்தில் வரிவிதிப்புத் துறையில் பணிக்கு சேர்ந்தார். பின், அவர் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் ஈடுபட முடிவு செய்தார். பார்லே, மற்றும் ஐடிசி போன்ற பிராண்டுகளுடன் பணிபுரிந்த Denstu Inc நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

புரபஷன் ஒரு புறமிருக்க, அவரது உடல்நிலையினை பாதிக்காத உணவுப் பண்டங்களை செய்து நாவிற்கு விருந்தளிக்கும் அவரது குக்கிங் பேஷனும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. பள்ளிப் படிப்பை மேற்கொண்டிருந்த போது, அவருடைய தோழியின் பிறந்தநாளுக்கு அவரே கேக் செய்துள்ளார். ஆனால், அது சொதப்பலில் முடிந்தது. அப்போதிருந்தே கிச்சன் பக்கம் அவர் அடிக்கடி செல்வதுண்டு.

குடும்பத்தில் இருந்த அனைவருமே குக்கிங் எக்ஸ்பேர்ட்களாக இருந்ததால், ப்ரியாஷாவிற்கு புதிய ரெசிபிக்களை அதிலும், டேசர்ட் அயிட்டங்களை தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்தது. நொறுக்கு அயிட்டங்களில் தொடங்கி பேக்கிங் வரை சென்றது அவரது குக்கிங் பயணம்.

அதன் நீட்சியாய் பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபிக்களை ஆவணப்படுத்தும் நோக்கிலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெசிபி வீடியோக்களை அப்லோடு தொடங்கியுள்ளார். காலப்போக்கில் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, ரெசிபிக்களுக்கான வரவேற்புகளும் குவிந்தது.

அவருக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களின் வழி அவர் அறிந்தது, உடல்நிலையை பாதிக்காத ஆரோக்கியமான தின்பண்டங்களை உண்பதில் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், அதை செய்வதற்கான நேரமின்மை மற்றும் முறையும் தெரியாததால் ஆரோக்கிய ஸ்நாக்ஸ்களை தவிர்த்துவிடுகின்றனர் என்பதை உணர்ந்துள்ளார்.

டேஸ்ட் வித் ஹெல்தி உணவுகள்!

2019-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு உணவு பிராண்ட் ப்ரியாஷாவின் ரெசிபி வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களது நிகழ்ச்சி ஒன்றில் ஃபுட் ஸ்டாலை வைக்க அவருக்கு அழைப்பு விடுத்தது. எதிர்பாரா அழைப்பால் திகைத்த ப்ரியாஷா, அவரது பிராண்டிற்கென ஒரு லோகோவை உருவாக்கி, ஸ்டாலில் என்னென்ன இனிப்பு தின்பண்டங்களை விற்கலாம் என்பதற்கான மெனுவினையும் வடிவமைத்தார். அந்நிகழ்வில் அவருக்கு அளவுகடந்த வரவேற்பு கிடைத்தது. விளைவாய் அவரது பணியை துறந்து தொழில்முனைவு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அங்கிருந்து தொடங்கியது “தி சினமன் கிச்சனின்” பயணம்!.

“பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடக்க நாட்களில் அந்நோய் குறித்த புரிதலும், அதன் அறிகுறிகள் பற்றி அறிவும் பரந்தளவில் இல்லை. இதனால், இளம் வயதில் என் உடல்நிலையைச் சுற்றி நிறைய சவால்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு வளர்ந்தேன். இது பிசிஓஎஸ் பற்றி அறிந்து கொள்ள என்னைத் துாண்டியது. மேலும், உணவுக்கட்டுபாடிலிருந்து விடுபட எண்ணினேன். ஒரு ஸ்வீட் லவ்வராக இனிப்பு வகைகளை உண்ணாமல் இருப்பது கடினமாக இருந்தது. அதனால், இனிப்பு வகைகளை செய்வதற்கான மூலப்பொருள்களை ஆரோக்கியமானதாக தேடத் தொடங்கினேன்.

உண்மையில் மக்கள் ஆரோக்கியமாக சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தின்பண்டங்களைத் தயாரிக்க நேரமும் விருப்பமும் இல்லை. இதுவே சொந்த நிறுவனமான தி சினமன் கிச்சனைத் தொடங்கத் துாண்டியது. இனிப்புகளின் மீதிருந்த காதல், அதை தொழிலாக தொடங்க வைத்தது” என்று பகிர்ந்தார் ப்ரியாஷா.

வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் அவரது நிறுவனத்தை வீட்டு சமையலறையிருந்து தொடங்கினார். ஆரம்பத்தில் நட் பட்டர், ஃபட்ஜ், மைதா மாவு இல்லாத பாதாம் குக்கீகள், எனர்ஜி பைட்ஸ், ரொட்டி, போன்ற பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை விற்பனை செய்துள்ளார். 2 மாதங்கள் மட்டும் கெட்டு போகாமலிருக்கும் அத்தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் வாங்குவதற்கு 3 தினங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம் அவர்கள் மீண்டும் வாங்கும் விகிதத்தை பாதித்தது.

எனவே, அவர் தி சினமன் கிச்சனின் கீழ் பேக்கரி தொழிலைத் தொடங்க முடிவு செய்தார். ஆரம்பத்தில் அவருக்கு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆர்டர்கள் கிடைத்ததாக நினைவு கூர்ந்த ப்ரியாஷா, அவரது வணிகத்தின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பயந்ததாக தெரிவித்தார்.

“என் வேலையை விட்டுவிட்டு தொழிலை தொடங்கினேன். ஆரம்பத்தில் எங்களுக்கு அதிக ஆர்டர்கள் வரவில்லை. இது ஒரு கடினமான சூழ்நிலையாகத் தோன்றியது. அந்த சமயம் சவாலானதாக இருந்த போதிலும்,முயற்சியினை கைவிடவில்லை. ஆர்டர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றாகவும் பின்னர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்து ஆர்டர்களாகவும் அதிகரித்தது” என்றார்.

நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலே ரூ.1,40,000 விற்பனையை பதிவு செய்தது. அதற்கு அடுத்த ஆண்டுக்கு ரூ.12,50,000 வரை வருவாய் ஈட்டியுள்ளது. நிகழும் நிதியாண்டில் ரூ.6 கோடி விற்பனையை நிறுவனம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

“நாங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு பிராண்டாகத் தொடங்கினோம். வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அறிந்துகொள்ள அவர்களுடன் தொடர்பு கொள்ள சமூக வலைதளம் எனக்கு உதவியது” என்கிறார் ப்ரியாஷா. சர்க்கரை பயன்படுத்தாமல், எவ்வித பதப்படுத்தும் பொருள்கள் சேர்க்காமல் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் என்பதை தாண்டி, அவர்களது யுனிக்கான ரெசிப்பளே அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனம் 80% பெண் பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது. கூடுதலாக, பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடன், வொர்க்‌ஷாப்களையும் நடத்தி வருகிறார். இல்லத்தரசிகள் பலரும் ஆர்வமாக கலந்து கொள்ளும் 3 மணி நேர வொர்க் ஷாப்பினை ரூ1750 கட்டணத்தில் கற்றுக் கொடுக்கிறார்.

தி சினமன் கிச்சனானது அதன் இணையதளம் மற்றும் அமேசான், பிளிங்கிட், லீ மார்சி ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் வழியே அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், தயாரிப்புகள் க்ரீனர், நேச்சர்ஸ் சோல் மற்றும் பல ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கிறது.

பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் சமீபத்தில் ஷார்க் டேங்க் சீசன் 4 இல், போட் நிறுவனர் அமன் குப்தாவிடமிருந்து ரூ.60 லட்சம் நிதி திரட்டியது. வரும் ஆண்டுகளில், தயாரிப்புகளின் ஷெல்ஃப் லைஃபை மேம்படுத்துவதிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களை விரிவடைவதிலும் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *