Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

டிவிட்டர் சேவை சர்ச்சைக்குள்ளாகி, பல்வேறு மாற்று சேவைகளை கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவையான கூ (Koo ) சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவையா ‘கூ’ (Koo App), சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு முதல் கட்டமாக அமெரிக்காவில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னமரிக்க நாடான பிரேசிலில் கூ சேவை அறிமுகமான 48 மணி நேரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றான டிவிட்டர், அண்மையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கால் கையகப்படுத்தப்பட்டது. புதிய நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக டிவிட்டர் சேவை பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக, டிவிட்டர் அளிக்கும் நீல நிற டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனும் தகவல் பரவலான கண்டனத்திற்கு உள்ளானது.

எலான் மஸ்க் நடவடிக்கையால் டிவிட்டர் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், மாஸ்டோடான் போன்ற மாற்று குறும்பதிவு சேவைகள் பயனாளிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இதனிடையே, இந்தியாவில் உருவாக்கப்பட்ட உள்ளூர் மொழிகளில் குறும்பதிவுகளை வெளியிட வழி செய்யும் Koo சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சேவையான Koo, தென்னமரிக்க நாடான பிரேசிலில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, உள்நாட்டிலும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

இந்திய டிவிட்டர் Koo

இந்திய குறும்பதிவு சேவையான கூ, ஏற்கனவே டிவிட்டருக்கு மாற்றாக கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும், Koo சேவை அப்ரமேயா ராதாகிருஷ்ண மற்றும் மயங்க் பிடாவட்கா ஆகியோரால் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

அப்ரமேயா, உள்ளூர் மொழிகளில் கேள்வி பதில் பாணியில் தகவல்களை பெற வழி செய்யும் வோகல் (Vokal) சேவையை துவக்கி நடத்தி வந்த நிலையில், 2019ல் குறும்பதிவு சேவையான Koo-வை துவக்கினார். அதற்கு முன் அவர் டாக்ஸிபார்ஷுயர் நிறுவனத்தை துவக்கினார்.

ஆங்கிலம், தவிர இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் குறும்பதிவுகளை வெளியிட வழி செய்வது Koo சேவையின் சிறப்பம்சமாக அமைந்தது.

Koo சேவை முதலீட்டாளர்கள் ஆதரவையும் பெற்ற நிலையில், 2020ல் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்ட போது கவனத்தை ஈர்த்தது.

சீரான வளர்ச்சி

Koo சேவையை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். சீரான வளர்ச்சி பெற்று வரும் கூ, தற்போது டிவிட்டர் சர்ச்சையால் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அளவில் கூடுதல் பயனாளிகளை ஈர்த்துள்ள Koo, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிவிட்டர்க்கு மாற்று சேவைகளுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் சூழலில், koo சர்வதேச விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச விரிவாக்கத்தின் முதல் கட்டமாக கூ, அமெரிக்காவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிரேசில் ஆதரவு

இதனிடையே, தென்னமரிக்க நாடான பிரேசிலில் கூ செயலி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த செயலி ஒரு மில்லியன் டவுண்லோடை எட்டியதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூர் மொழிகள் ஆதரவு கொண்ட Koo, போர்ச்சுகீசிய மொழியில் செயல்படுவதால் பிரேசில் பயனாளிகளை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், Koo நிறுவனம் அடுத்த கட்ட நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது. டைகர் குளோபல் மற்றும் ஆக்சல் பாட்னர்ஸ் தலைமை வகித்த சுற்றில் நிறுவனம் ரூ.51.08 கோடி திரட்டியுள்ளது. கலாரி கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிதி திரட்டப்பட்டுள்ளது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *