Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

உலகப் பணக்காரர் முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய மாங்கனி ஏற்றுமதியாளர் ஆன கதை தெரியுமா?

பெட்ரோலியம் தொடங்கி தொலைத்தொடர்பு துறை வரை கோலோச்சிய தொழில் ஜாம்பவானாக நமக்கு முகேஷ் அம்பானியைத் தெரியும். ஆனால், வேளாண் துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க தடம் பதித்துள்ளதை அறிந்திருக்கிறோமா?!

ஆம், முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய மாங்கனி ஏற்றுமதிக்குச் சொந்தக்காரர். தொழில் துறை ஜாம்பவான் வேளாண் துறையில் சாதித்த கதை ஆச்சரியமானதும், உத்வேகம் தருவதுமானதாகவும் இருக்கிறது.

தொடங்கியது பயணம்:

1997-ல் தான் இந்தப் பயணம் தொடங்கியது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டபோது அந்நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கைகளுக்கு உள்ளானது.

ஆகையால், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றி இருந்த தரிசு நிலங்களை பசுமையான மாந்தோப்பாக மாற்ற ரிலையன்ஸ் முடிவு செய்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான இந்த முயற்சி தொழிற்சாலையை சுற்றி பசுமையான வளையம் உருவானது.

அந்த மாந்தோப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் நினைவாக திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி என்று பெயர் சூட்டப்பட்டது. இது 600 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இங்கே 1.3 லட்சம் மாமரங்கள் உள்ளன. 200 வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

16-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அக்பர் உருவாக்கிய லக்கிபாக் தோப்பை நினைவுகூரும் வகையில் அம்பானியின் மாந்தோப்புக்கு லக்கிபாக் பெயரும் சேர்த்துச் சூட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப புதுமைகள்:

அந்த நிலத்தில் உப்புத் தன்மை அதிகமாக இருந்ததாலும், வறட்சி நிறைவாக இருந்ததாலும் அதனை சரிசெய்ய ரிலையன்ஸ் நிறுவனம் நிறைய தொழில்நுட்பப் புதுமைகளைப் புகுத்தத் தேவை இருந்தது. இதற்காக அருகிலேயே ஒரு டிசலினேஷன் ஆலையையும் (உப்புநீக்கும் ஆலை) நிறுவியது. கூடவே அவர்கள் மேம்படுத்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தினர். சொட்டு நீர்ப் பாசனம், உரமிடுதல் ஆகியவற்றில் பல புதுமைகளைப் புகுத்தினர்.

மாம்பழ வகைகளும், ஏற்றுமதி உத்தியும்:

திருபாய் லக்கிபாக் மாந்தோப்பில் பல்வேறு பிரபல மாங்கனி வகைகளான கேசர், அல்ஃபோன்ஸா, ரத்னா, சிந்து, நீலம், அம்ராபள்ளி ஆகிய வகைகளும் சர்வதேச மாங்கனி வகைகளான டாமி அட்கின்ஸ், கென்ட், லில்லி, கெய்ட், இஸ்ரேலின் மாயா ஆகியனவும் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் இந்த மாந்தோப்பில் 600 டன் உயர் தர மாங்கனிகள் உற்பத்தியாகின்றன. இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதோடு சர்வதேச சந்தைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், ஆசியாவிலேயே ரிலையன்ஸ் தான் அதிக மாங்கனிகளை உற்பத்தி செய்கின்றது.

சமூக பங்களிப்பும், சுற்றுச்சூழல் தாக்கமும்:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உறுதியான நிலைப்பாட்டால் மாந்தோப்பு என்பது நீடித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தாண்டி உள்ளூர் விவசாயிகளுக்கும் உதவும் வகையில் கட்டமைக்கப்பட்டது. உள்ளூர் விவசாயிகள் வேளாண் பணிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ரிலையன்ஸ் ஊக்குவிக்கிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் இலவச மரக்கன்றுகள் வழங்குகிறது. ரிலையன்ஸின் மாந்தோப்பில் விவசாயிகளுக்கு இலவச வேளாண் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸின் பங்களிப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்தியதோடு, சமூக வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் இந்த தோட்டமும் அதில் அவர் கோலோச்சியதும், தொழில் துறை ஜாம்பவான்கள் எவ்வாறு சுற்றுச்சூழல் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருவார்கள் என்பதற்கு ஒரு சாட்சியாகிறது.

திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நீடித்த நிலைத்த வளர்ச்சியை புத்தாக்க சிந்தனைகள் மூலம் உறுதிப்படுத்துதலுக்கான ஒரு சாட்சியாக உள்ளது. அதுவே ரிலையன்ஸை சர்வதேச மாங்கனி ஏற்றுமதியில் ஒரு சர்வதேச ஜாம்பவானாகவும் இருக்கிறது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *